சாமி தரிசனம் செய்த உளுந்தூர்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 31 March 2026

சாமி தரிசனம் செய்த உளுந்தூர்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர், ஜி. ஆர். வசந்தவேல் தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற வேண்டியும், தொகுதி மக்களின் நலன், முன்னேற்றம் மற்றும் அமைதிக்காக சிறப்பு அர்ச்சனை செய்து பிரார்த்தனை மேற்கொண்டார். கோவில் அர்ச்சகர்கள் வேட்பாளருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பிரசாதம் வழங்கினர்.

இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர், நகர செயலாளர், கூட்டணி கட்சி நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வேட்பாளருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். மேலும், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் திரளாக பங்கேற்று உற்சாகமான சூழலை உருவாக்கினர்.


D. செல்வம் 
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:

Post a Comment

Post Top Ad